பஞ்ச-பக்ஷி சாஸ்திரம்
பஞ்ச-பக்ஷி சாஸ்திரம் என்பது ஒரு பண்டைய கால தமிழ் ஜோதிட மரபுகளில் பின்பற்றப்பட்ட “பனை ஓலை முறை”. பஞ்ச என்றால் ஐந்து, பக்ஷி என்றால் பறவை என்று பொருள். பஞ்ச பூதங்களான – காற்று, நெருப்பு, நீர், பூமி மற்றும் ஆகாயம் (ஈதர்) ஆகிய ஐந்து கூறுகளும், அனைத்து மனித உயிரினங்களிலும் உள்ளன. இதைப்பொறுத்து, வேத சாஸ்திரங்களின் படி, இந்த ஐந்து கூறுகள் வல்லூறு, ஆந்தை, காகம், சேவல் மற்றும் மயில் என ஐந்து பறவைகளால் குறிக்கப்படுகின்றன. இந்த பறவைகள் நம்முடைய எல்லா செயல்களையும் ஜோதிட ரீதியில் கட்டுப்படுத்துகின்றன.
2020-2021 வருடாந்திர கணிப்புகளுக்கான ஜோதிட பொருளை பெறுவதற்கு கிளிக் செய்யவும்
அவை ஒரு குறிப்பிட்ட வரிசையில் 27 நக்ஷத்திரங்கள் (Stars), 7 வார நாட்கள் (Week)மற்றும் நாளின் பல்வேறு நேரங்களை ஆளுகின்றன.
பொதுவாக ஒருவரின் ராசியை ஆளும் பறவை (Ruling Bird), அவரின் பிறந்த (ஜென்ம) நக்ஷத்திரத்தை அடிப்படையாகக் கொண்டது – அதாவது அவர் பிறந்த நேரத்தின் போது உள்ள, சந்திரனின் திசை இருப்புநிலையை பொறுத்தே நக்ஷத்திரத்தின் கட்டமைப்பு அமைகிறது. எந்தவொரு நாளிலும், நேரத்திலும், இந்த ஐந்து பறவைகளில் ஒன்று, பின்வரும் 5 செயல்களில், ஏதேனும் ஒன்றில் தன் தனித்தன்மையை செலுத்தும்.
- ஆட்சி
- ஊண்
- நடை
- துயில்
- சாவு
மேலும் ஒருவர் இறக்கும் போது, ராசியை ஆளும் பறவையின் “ஆளுமை நிலை” மிகவும் சக்திவாய்ந்தது மற்றும் குறைந்த சக்தி வாய்ந்ததாக இருக்கும். மற்ற பறவைகளின் தனித்தன்மை, ஒரு குறிப்பிட்ட வரிசையில் பின்பற்றப்படுகிறது. அந்தந்த பிறந்த நேரத்திற்கேற்றாப்போல் “செல்வாக்கு செலுத்தும் பறவை” மற்றும் அவற்றின் “பரஸ்பர உறவு” மற்றும் அவற்றின் இயல்பின் தொடர்பு, போன்றவற்றின் அடிப்படையிலும், உங்கள் ஆளும் பறவையின் அடிப்படையிலும் தான் “பஞ்ச-பக்ஷி வழிகாட்டுதல்” வழங்கப்படுகிறது.
நக்ஷத்திரம் | கிருஷ்ணபக்ஷ பிறப்பு | சுக்லபக்ஷ பிறப்பு |
அஸ்வினி | வல்லூறு | மயில் |
பரணி | வல்லூறு | மயில் |
கிருத்திகா | வல்லூறு | மயில் |
ரோகிணி | வல்லூறு | மயில் |
மிருகசீரிடம் | வல்லூறு | மயில் |
திருவாதிரை | ஆந்தை | சேவல் |
புனர்பூசம் | ஆந்தை | சேவல் |
பூசம் | ஆந்தை | சேவல் |
ஆயில்யம் | ஆந்தை | சேவல் |
மகம் | ஆந்தை | சேவல் |
பூரம் | ஆந்தை | சேவல் |
உத்திரம் | காகம் | காகம் |
அஸ்தம் | காகம் | காகம் |
சித்திரை | காகம் | காகம் |
சுவாதி | காகம் | காகம் |
விசாகம் | காகம் | காகம் |
அனுஷம் | சேவல் | ஆந்தை |
கேட்டை | காகம் | ஆந்தை |
மூலம் | சேவல் | ஆந்தை |
பூராடம் | சேவல் | ஆந்தை |
உத்தராடம் | சேவல் | ஆந்தை |
திருவோணம் | மயில் | வல்லூறு |
அவிட்டம் | மயில் | வல்லூறு |
சதயம் | மயில் | வல்லூறு |
பூரட்டாதி | மயில் | வல்லூறு |
உத்திரட்டாதி | மயில் | வல்லூறு |
ரேவதி | மயில் | வல்லூறு |
பஞ்ச-பக்ஷி சாஸ்திரம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
ஒவ்வொரு நாளும் 12 மணிநேரம் ஐந்து சம பாகங்களாக பிரிக்கப்பட்டு, இந்த ஐந்து பறவைகளின் வெவ்வேறு நடவடிக்கைகளுக்கு ஏற்றார்போல் பரிந்துரை வழங்கப்படுகிறது. இதன் ஒவ்வொரு பகுதியிலும், அபஹாரா பறவைகள் எனப்படும் பிற பறவைகள் மற்றும் அவற்றின் செயல்பாடுகளுக்கு, நேரம் மேலும் ஒதுக்கப்படுகிறது. பஞ்ச-பக்ஷிசாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்ட விரிவான அட்டவணையை பயன்படுத்தி, ஒரு பகல் அல்லது இரவின் சிறந்த பொருத்தமான, சாதகமான நேரத்தை, ஒருவர் தேர்ந்தெடுக்கலாம்.
சுக்லபக்ஷத்தின் போது
கிருஷ்ணபக்ஷத்தின் போது
பஞ்ச-பக்ஷி சாஸ்திரத்திற்கான மென்பொருளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?
பஞ்ச-பக்ஷி சாஸ்திரம் தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமானது. இது, ஒரு நல்ல நேரத்தைத் தேர்ந்தெடுக்கவும், ஜோதிட ரீதியான (ப்ரஸ்ன) கேள்விகளுக்கு பதிலளிக்கவும், உங்களுக்கு பெரிதும் உதவுகிறது.
பஞ்ச-பக்ஷி சாஸ்திரம் குறித்த விரிவான ஆராய்ச்சியின் அடிப்படையில் தான் ஆஸ்ட்ரோ-விஷன் தனது முதன்மையான “பஞ்ச பக்ஷி மென்பொருள் – யை” உருவாக்கியுள்ளது. பொதுவாக பஞ்ச் பக்ஷியை அடிப்படையாகக் கொண்ட கணிப்புகள் எளிதில் கிடைக்காது. ஆனால் எங்களின் இந்த நம்பகமான மென்பொருளில் மூலம், நீங்கள் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு தனிப்பட்ட அமைப்பின் அடிப்படையில் மிகத்துல்லியமான கணிப்புகளை வழங்க முடியும். அதன் மூலம் நீங்கள், உங்களின் தற்போதைய வருமானத்தை கூட்டவும், சரியான நேரத்தை தேர்ந்த்டுத்து அதன் மூலம் உங்களது காரிய சித்திகளை அதிகரிக்கவும் முடியும்.
நீங்கள் ஏற்கனவே ஒரு ஜோதிட மையத்தை நடத்தி வந்தால் அல்லது ஜோதிட சேவைகளை வழங்கினால், உங்களிடம் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு, பஞ்ச-பக்ஷி அறிக்கையை வழங்குவதன் மூலம் அதிக வருமானத்தை ஈட்ட, ஆஸ்ட்ரோ-விஷன் பஞ்ச-பக்ஷி மென்பொருள் சிறந்த வழியை வழங்குகிறது.
ஆஸ்ட்ரோ-விஷன் பஞ்ச-பக்ஷி மென்பொருள் – பஞ்ச-பக்ஷி சாஸ்திரம் அல்லது பஞ்சபூதா பற்றி மேலும் அறிய ஒரு சிறந்த மென்பொருள். இங்கு எளிதான குறிப்புக்கான கணிப்புகளுடன் விரிவான விளக்கங்கள் வழங்கப்படுகின்றன.
Previous: குரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020