வேத ஜோதிடம்

வேத ஜோதிடம்

வேத ஜோதிடம் (Vedic Astrology)

வேத ஜோதிடம் என்பது, வேதாங்கா அல்லது இந்திய ஜோதிடம் என்றும் அழைக்கப்படுகிறது, மேலும் இது ஒரு பண்டைய கால விஞ்ஞானமாகும். இது முழுக்க முழுக்க வானவியல் அம்சங்கள் பற்றிய ஜோதிட ரீதியான ஆய்வு மற்றும் மனித வாழ்வில் அவற்றின் செல்வாக்கு தெரிந்துகொள்ள கையாளும் ஒரு முறையாகும். இந்திய ஜோதிடம், வேதங்களை உள்ளடக்கிய, ஒருங்கிணைந்த பகுதியாகும் என்பதை ‘வேதாங்கா’ என்ற சொல் நமக்கு சுட்டி காட்டுகிறது. வேதாஸ்-ன் இலக்கிய மொழிபெயர்ப்பு சொல்லே “வேதாங்கா”.

ஜோதிடம் உயிருள்ள உயிரினங்களின் வளர்ச்சி மற்றும் அவர்களின் வாழ்க்கையின் போக்கில் ஒரு முக்கிய செல்வாக்கைக் கொண்டுள்ளது என்ற நம்பிக்கையை பண்டைய காலத்திற்கு முன்பே முன்னோர்கள் ஆதரித்துள்ளதை பின்வரும் வரலாற்று சுவடுகள் நமக்கு காட்டுகிறது. கிமு 3000-க்கு முன்பே பாபிலோனியாவில் ஜோதிடர்கள் இருந்ததை சில வரலாறு சுவடுகள் சாட்சியமளிக்கிறது. ஆனால் ஜோதிடம் இந்தியாவில், ஒரு விஞ்ஞானமாக வளர்ந்திருந்தது. பண்டைய வேதங்களான சூரிய சித்தாந்தா மற்றும் வேதாங்கா ஜோதிஷம் 5000 ஆண்டுகளுக்கு மேலானவை என்று பெரிதும் நம்பப்படுகிறது. ஜோதிடம் என்பது உலகின் மிகப் பழமையான, ஆழமான மற்றும் மிகப் பெரிய அறிவியலில் ஒரு பகுதியாகும்.

வேதங்கள் ஆறு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன:

1. சிக்ஷா (Shiksha) – வேத கூறுகள் மற்றும் அவற்றின் சரியான உச்சரிப்பு பற்றிய ஆரம்ப ஆய்வு
2. ச்சண்டா (Chanda) – வேதிக் ஸுக்தாஸ்-ன் சரியான வெளிப்பாட்டைக் கற்றல்.
3. வியாகரண (Vyākaraṇa) – இலக்கண அம்சத்தைக் கற்றுக்கொள்ள உதவுகிறது.
4. நிருக்தா (Nirukta) – கடினமான சொற்கள், “பாதாஸ்” மற்றும் மந்திரங்களை புரிந்து கொள்வதில் பயனுள்ளது.
5. கல்பா (Kalpa) – வேதங்களின் சடங்கு அம்சத்தைப் புரிந்துகொள்ள உதவுகிறது.
6. ஜோதிஷம் அல்லது ஜோதிடம் (Astrology) – வேதங்களின் கூறுகள் (வேதங்களின் கண்கள்), கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் காண உதவுகின்றன.

starclockvxஆஸ்ட்ரோ-விஷனின் StarClock VX பஞ்சாங்கம் மென்பொருள் – சித்ர பக்ஷா அயனாம்சா அல்லது லஹரி அயனாம்சா, ராமன் அயனாம்சா, கிருஷ்ணமூர்த்தி அயனாம்சா, திருக்கணிதம் அயனாம்சா மற்றும் பஞ்சாங்க கணிதங்கள் போன்ற பல்வேறு அமைப்புகளை உங்களுக்கு மிகவும் துல்லியமாக எளிதாக வழங்குகிறது. இந்த மென்பொருளில் ஏற்கனவே வரையறுக்கப்பட்ட அயனம்சாவில் உங்கள் விருப்ப அயனாம்ச பிரிவை நீங்கள் தேர்வு செய்வதன் மூலம், வருடத்திற்கு ஏற்றாற்போல் ஜோதிட அறிக்கையை பெற முடியும். இந்த விருப்பங்கள் வேத ஜோதிட ஆராய்ச்சியில் ஆர்வமுள்ள ஜோதிடர்களுக்கும் ஜோதிட மாணவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

View in English

Previous: உங்கள் திருமணம் எப்போது என்று அறிய ஆவலா?

LS-mini Download - FREE Astrology Software