திருமண வாழ்க்கையில் தடையா?

Kundli Matching - Vedic astrology blog

குண்டலி (Kundli)

நீங்கள் திருமண வயதில் உள்ளவரா?

உங்கள் வாழ்க்கையை மாற்ற போகும் உங்களின் கனவு வாழ்க்கைத்துணையை அறிந்து கொள்ள (ஆணோ, பெண்ணோ) காத்திருக்கிறீர்களா, ஆனால் நிராகரிக்கப்படுகிறீர்களா? ஆம் எனில் நீங்கள் ஜோதிடத்தை முயற்சி செய்ய வேண்டும். மிக சிறந்த ஜோதிட பரிந்துரையை தேர்ந்தெடுப்பதன் மூலம், நீங்கள் சரியான தீர்வை பெற முடியும்.

இந்து மதத்தில் குறிப்பாக, ஜோதிட கிரகங்கள் மற்றும் அவர்கள் பிறந்த நேரத்தில் அவர்களின் கிரக அமைவுகள் மற்றும் நிலைப்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஒருவரின் வாழ்க்கையில் திருமண நேரம் முன்கூட்டியே தீர்மானிக்கப்படுகிறது என்று நம்பப்படுகிறது. பண்டைய ஜோதிட அறிவின் படி, உங்கள் பிறப்பு ஜாதகத்தின் 7 வது வீடு (7th House)திருமணத்தை குறிக்கிறது.

வீனஸ் மற்றும் புதன் கிரகங்கள் திருமணம், காதல் மற்றும் உறவோடு தொடர்புடையவை. மேலும், உங்கள் பிறப்பு ஜாதகத்தின் 8 அல்லது 12 வது வீட்டில் நிலைநிறுத்தப்பட்டு, குறைபாடாக இருந்தால், அவை மங்கல் தோஷ், கிரஹா தோஷ் போன்ற ‘தோஷங்களை’ உருவாக்குகின்றன, இது திருமண தாமதத்திற்கு காரணமாகிறது. இந்திய கலாச்சாரத்தின் படி இந்திய திருமணத்திற்கு குண்டலி பொருத்தம் ஒரு முக்கிய காரணியாகும்.

Soulmate Kundli Matching Software

 

Astro-Vision SoulMate is the most trusted Kundli Matching Software and has been used by marriage bureaus, astrology centres, astrologers and popular matrimonial websites all over the world. Get Quote

குண்டலி மற்றும் குண்டலி பொருத்தம்

இந்து திருமணங்களில் பின்பற்றப்படும் முதல் படியே, மணப்பெண்ணுக்கும் மணமகனுக்கும் குண்டலி (Kundli) பொருத்தம் (ஜாதக பொருத்தம்) பார்ப்பது தான். ஏனெனில் குண்டலி தான் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் கையாள்கிறது மற்றும் தன்மை, ஆளுமை, மனநிலை, குடும்பம், திருமணம், வாழ்க்கை, அதிர்ஷ்டம், சுகாதாரம், கல்வி மற்றும் பலவற்றை உங்களுக்குச் சொல்ல முடியும். இது பலங்களையும் பலவீனங்களையும் வெளிப்படுத்துகிறது மற்றும் வழிகாட்டியாகவும் வெற்றிக் கருவியாகவும் உங்களுக்கு உதவுகிறது. உங்கள் கல்வி மற்றும் வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பது போல வாழ்க்கையில் சரியான முடிவுகளை எடுக்க ஜாதகம் உங்களுக்கு உதவுகிறது. எனவே குண்டலி பொருத்தம் பார்ப்பதன் மூலம் எந்த ஒரு பிரச்சனையுமின்றி இரண்டு பேர்களின் ஜாத பொருத்தத்தை கண்டறிந்து, அந்த தம்பதி சந்தோஷமான திருமண வாழ்க்கையை வாழ முடியும்.

குண்டலி பொருத்தம் எப்படி நிகழ்கிறது

கிரகங்கள் சுழற்சியின் கண்ணோட்டத்தில் தான் ஜோதிடர்கள் உங்கள் ஜாதகத்தை பார்க்கின்றனர். எனவே அந்த நேரத்தில் உங்களின் ஜாதக கட்டங்களின் கிரக சுழற்சியை பொறுத்தே உங்களுடைய தனிப்பட்ட ஆளுமை அமையும். திருமண பொருத்தம் பார்க்கும் போது, தம்பதிகள் ஒன்றாக வாழப் போவதால், அவர்களின் நட்சத்திரங்களும், கிரகங்களும் தங்களுடைய செல்வாக்கை தங்கள் துணையின் விதி மீது எந்த அளவுக்கு ஆளுமை செலுத்துகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அதனால் இரண்டு பேர்களின் நட்சத்திர பொருத்தங்களை ஜோதிடர்கள் சரிப்பார்ப்பார்கள். இதுப்போக, இருவருடைய குணங்களுக்கு இடையே பொருத்தம் இருக்குமா என்பதையும் இந்த குண்டலி மூலம் அவர்கள் கூறி விடுவார்கள்.

குண்டலி பொருத்தம் ஏன் அவசியமான ஒன்று? 

தம்பதிகள் இருவரும் சந்தோஷமான மற்றும் நிம்மதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற காரணத்தினாலேயே குண்டலி பொருத்தம் பார்க்கப்படுகிறது. ஒவ்வொருவரின் திருமணம் வெற்றிகரமானதாக அமைய வேண்டுமானால், ஜாதக பொருத்தம் பார்க்க வேண்டிய முக்கியத்துவம் கண்டிப்பாக வாழ்க்கைக்கு தேவைப்படும். அதற்கு காரணம் ஒருவருடைய தன்மையை அவருடைய ஜாதகத்தை வைத்து கணித்து விடலாம். உங்கள் துணை அந்த திருமணத்தில் நேர்மையானவராக இருப்பாரா, உங்கள் இருவருக்கும் இடையேயான உறவுமுறை எப்படி அமையும்,போன்றவற்றை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

இலவச குண்டலி மென்பொருள் உங்கள் விருப்ப மொழிகளில் கிடைக்கிறது!!!  பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்!!!

ஜோதிட ரீதியாக குண்டலி பொருத்தம் பார்க்கும் போது, குணங்கள் என அழைக்கப்படும் 8 புள்ளிகளும் கருதப்படும். ஒவ்வொரு குணங்களுக்கும் குறிப்பிட்ட மதிப்பு உள்ளது. இந்த 8 குணங்களின் கூட்டு தொகை 36 ஆக வரும். ஒரு தம்பதி சந்தோஷமாக இணைந்து வாழ்ந்திட குறைந்தது 18 புள்ளிகளாவது பொருந்தியிருக்க வேண்டும். ஒரு வேளை, பொருந்திய புள்ளிகள் 27-க்கு மேலாக இருந்தால், அது தான் சிறந்த பொருத்தமாக இருக்கும். ஒரு வேளை, 18 புள்ளிகளுக்கு குறைவான பொருத்தம் இருந்தால், அந்த திருமணம் நடக்க அறிவுறுத்தப்படமாட்டாது.

குண்டலியில் உள்ள குணங்கள்

  • தினம் 
  • கனம்
  • யோனி
  • மகேந்திரம்
  • வசியம்
  • ராசி
  • ராசி அதிபதி
  • ஸ்த்ரி தீர்க்கம்

ஒரு ஜோதிடர்களின் பரிந்துரை படி “குண்டலி பொருத்தமே உங்களின் திருமணம் பேரின்பமாக அமைய முக்கிய காரணியாகும்” உங்கள் ஜோதிட36 குணங்களில் குறைந்தது 50% ஆவது உங்கள் வாழ்க்கை துணையோடு பொருந்தியிருந்தால் தான் அது நல்ல சம்பந்தமாக மாறும். மேலும், உங்கள் ஜாதகத்தில் உள்ள மாங்கல்ய தோஷம் (செவ்வாய் கிரகத்தின் தீய தாக்கங்கள்), கால சர்ப்ப தோஷம் (அனைத்து கிரகங்களும் ராகு மற்றும் கேதுவிற்கு நடுவே இருக்கும்) போன்றவைகளையும் சரியாக கண்டறிந்து அதற்கான தீர்வுகளையும் பெற வேண்டும். அப்போது தான் சந்தோஷமான சம்பந்தம் ஏற்பட்டு வெற்றிகரமான திருமணம் முடியும்.”

ஜாதக பொருத்தம் இல்லையெனில்…

ஒவ்வொருவரின் திருமணம் வாழ்க்கை வெற்றியடைவதற்கு அனைத்து கிரகங்களும், அவர்களின் ஜாதகமும் தான் முக்கிய பங்கை வகிக்கிறது. அதனால் தான் குண்டலி பொருத்தம் அவசியமாக கருத படுகிறது. குண்டலி பொருத்தம் இல்லையென்றால், அனுபவப்பட்ட ஜோதிடர்களை சந்தித்து மிக சரியான ஜோதிட பரிந்துரைகளை பெற்று, தோஷங்களுக்கு பரிகாரங்களை செய்ய முடியும். அதனால் இரு நபர்களின் ஜாதகம் பொருந்தவில்லை என்றாலும் கூட அவர்களின் திருமணம் நடக்க ஜோதிடம் வழிவகுக்கும்.

LS-mini Download - FREE Astrology Software